பணகுடி முந்தைய காலத்தில் பனைவளம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இங்கு கத்தோலிக்க மக்கள் இல்லை. வடக்கன்குளம், காவல்கிணறு, கள்ளிகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ நாடார்கள் பனைத்தொழில் செய்வதற்காக இப்பகுதியில் வந்து குடியேறினார்கள். கி.பி. 1870-ல் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த Fr. கிரகோரி அவர்கள் 5 ஏக்கர் நிலத்தை பணகுடியில் வாங்கி 2 ஏக்கர் நிலத்தை கோயில் கட்டுவதற்காகவும், மீதி 3 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் இனாமாக கொடுத்ததாக கூறப்படுகிறது...
இத்தாலியில் இறைப்பணி செய்து தாய் மண்ணை நோக்கி வந்த என்னை வரவேற்றது புனித சூசையப்பர் ஆலயம். சிறுவயதிலிருந்தே புனித சூசையப்பர் என்றாலே எனக்கு தனிப்பற்று. எனவே பணகுடி பங்குத்தளத்தை நான் மிகவும் விரும்பி பெற்றுக் கொண்டேன். அதிலும் புனித சூசையப்பருக்கு புதிய ஆலயம் சுட்டும் பணி எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய குருத்துவ வாழ்வில் இது எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியமாக கருதுகிறேன். எனது குருத்துவ வாழ்வில் என்றும் மறக்க முடியாதது பணகுடி பங்கு ஆலயம் கட்டும் பணியில் என்னோடு இருந்து செயல்பட்ட எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன். பங்கின் ஆலய பணிக்காக என்னால் முடிந்தவரை பணி செய்கிறேன். ஆயிரக்கணக்கான பணகுடி மக்களின் நல்லுள்ளத்தாலும், பேராதரவாலும், தியாக நன்கொடைகளாலும், கடின உழைப்பாலும் கட்டப்பட்டதுதான் நம் ஆலயம். நாம் மட்டுமல்ல, மத, இன, மொழி, ஊர் கடந்து தாராளமான நன்கொடைகளால் நம் ஆலயத்தை தாங்கிய சூசையப்பர் பக்தர்கள் ஏராளம். அந்த நல்லுள்ளங்களை தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கொடைகளும், ஆலய கட்டுமான வரிகளும் பிரிப்பதற்காக நான், ஊர் தலைவர், நிர்வாகிகள், கட்டுமான பணி நண்பர்களுடன் உங்கள் வீடு தேடி வந்து ஓராயிரம் தடவை அன்பு தொல்லை கொடுத்திருப்பேன். ஆனால் பணகுடி இறைமக்கள் என்னை மதித்து ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து புன்முறுவலோடு எங்களை வரவேற்றீர்கள்! கொடுத்தீர்கள்! அதன் தாக்கம்தான் தென்தமிழகத்திலே தலைசிறந்த கோயிலாக உருப்பெற்றுள்ளது புனித சூசையப்பர் திருத்தலம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். நற்கருணைப் பேழையில் ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள பிரசன்னமிருப்பதால் அன்றாடம் ஆலயத்திற்கு வந்து நலம் தரும் நற்கருணையைப் பெற்று சுகம் பெறுவோம். என் தந்தையின் இல்லத்தை பொழுதுபோக்கு இடமாக்கக் கூடாது என்ற இயேசுவின் கூற்றை வாழ்வாக்கி இந்த பணகுடி மண்ணை புண்ணிய பூமியாக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து அர்த்தத்தோடு இவ்விழாவை கொண்டாடுவோம். இவ் ஆலயம் உருப்பெற காரணமாயிருந்த ஊர் நிர்வாகிகள், கட்டுமானக் குழு நண்பர்கள், இறைமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அன்பிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள். வானுயர்ந்த புதிய ஆலய கோபுரம் போன்று நம் மக்களின் வாழ்வும் வளமும், ஆன்மீகமும் தலைசிறந்து உயர்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.
திருவழிபாடு 2ஆம் ஆண்டு தவக்காலம் - 6ஆம் வாரம் புனித வாரம் - திங்கள் 30.03.2026
முதல் வாசகம் அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7.
ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
பதிலுரைப் பாடல் திருப்பாடல்கள் 27: 1. 2. 3. 13,14.
பல்லவி: (1a) ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
நற்செய்திக்கு முன் வசனம்
எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.
நற்செய்தி வாசகம் மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11.
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.
இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார்.
இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
Liturgical Year 2 Lent - 6th Week Monday of Holy Week 30.03.2026
First Reading A reading from the Book of Isaiah 42: 1-7.
Here is my servant whom I uphold, my chosen one, with whom I am pleased, Upon whom I have put my Spirit; he shall bring forth justice to the nations, Not crying out, not shouting, not making his voice heard in the street. A bruised reed he shall not break, and a smouldering wick he shall not quench, Until he establishes justice on the earth; the coastlands will wait for his teaching.
Thus says God, the Lord, who created the heavens and stretched them out, who spreads out the earth with its crops, Who gives breath to its people and spirit to those who walk on it: I, the Lord, have called you for the victory of justice, I have grasped you by the hand; I formed you, and set you as a covenant of the people, a light for the nations, To open the eyes of the blind, to bring out prisoners from confinement, and from the dungeon, those who live in darkness.
Responsorial Psalm Psalms 27: 1. 2. 3. 13,14.
(R) (1a) The Lord is my light and my salvation.
The Lord is my light and my salvation; whom should I fear? The Lord is my life’s refuge; of whom should I be afraid? (R) The Lord is my light and my salvation.
When evildoers come at me to devour my flesh, My foes and my enemies themselves, stumble and fall. (R) The Lord is my light and my salvation.
Though an army encamp against me, my heart will not fear; Though war be waged upon me, even then will I trust. (R) The Lord is my light and my salvation.
I believe that I shall see the bounty of the Lord in the land of the living. Wait for the Lord with courage; be stout-hearted, and wait for the Lord. (R) The Lord is my light and my salvation.
The Verse Before the Gospel
Hail to you, our King; you alone are compassionate with our faults.
Gospel Reading From the Gospel according to John 12: 1-11.
Six days before Passover, Jesus came to Bethany, where Lazarus was, whom Jesus had raised from the dead. They gave a dinner for him there, and Martha served, while Lazarus was one of those reclining at table with him. Mary took a litre of costly perfumed oil made from genuine aromatic nard and anointed the feet of Jesus and dried them with her hair; the house was filled with the fragrance of the oil. Then Judas the Iscariot, one of his disciples, and the one who would betray him, said, “Why was this oil not sold for three hundred days’ wages and given to the poor?” He said this not because he cared about the poor but because he was a thief and held the money bag and used to steal the contributions. So Jesus said, “Leave her alone. Let her keep this for the day of my burial. You always have the poor with you, but you do not always have me.”
The large crowd of the Jews found out that he was there and came, not only because of him, but also to see Lazarus, whom he had raised from the dead. And the chief priests plotted to kill Lazarus too, because many of the Jews were turning away and believing in Jesus because of him.
Copyright © St.Joseph Church Panagudi. All Rights Reserved.